மலேசியா-சிங்கப்பூர் சுற்றுச்சூழலுக்கான கூட்டுக்குழு ஏற்பாடு செய்த பயிற்சி!

Exercise organised by the Malaysia-Singapore Joint Committee on the Environment (Image: SCDF)

மலேசியா-சிங்கப்பூர் சுற்றுச்சூழலுக்கான கூட்டுக்குழு (MSJCE), தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) மற்றும் மலேசிய சுற்றுச்சூழல் துறை இணைந்து ஏற்பாடு செய்த பயிற்சி Tuas Second Linkல் நடத்தப்பட்டது.

இது 2000 ஆம் ஆண்டு முதல் துவாஸ் Tuas Second Linkல் நடைபெற்று வருகிறது, இது MSJCE ஏற்பாடு செய்த 12 வது பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை போக்குவரத்து விபத்தின் போது ஏற்படும் இரசாயன கசிவைத் தணிப்பதில் இரு நாடுகளின் முகமைகளுக்கிடையேயான கூட்டு பயிற்சியை இது உள்ளடக்கியுள்ளது.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து அவசரகால பதிலளிப்பு முகமை ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்த பயிற்சி உதவி செய்கிறது.