முன்னாள் காதலியின் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய மாணவர்! – மனநல மருத்துவமனையில் சிகிச்சை!

woman-arrested-sexual-services
sex
சிங்கப்பூரில் பாலிடெக்னிக் மாணவர் அவரது முன்னாள் காதலியின் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய குற்றத்திற்கு ஒரு வருடம் கட்டாய சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றவாளியான பாலிடெக்னிக் மாணவரும் ஏப்ரல் 2018 இல் காதலித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இருவரும் அவ்வப்போது பாலியல் செயல்களில் ஈடுபட்டபோது பெண்ணை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து சேகரித்துள்ளார்.
நூறுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் சேகரிக்கப்பட்டதாக குற்றவாளி தெரிவித்துள்ளான்.இருவரும் 2019 இல் பிரிந்தனர்.பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படங்களை குற்றவாளி நீக்கிவிட்டார் என்ற எண்ணத்தில் பாதிக்கப்பட்ட பெண் இருந்தார்.

டிசம்பர் 23, 2019 அன்று அவர்களுக்குள் மீண்டும் டெலிகிராமில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குற்றவாளி நிர்வாண வீடியோக்களை வலைதளங்களில் பகிரப் போவதாகக் கூறி மிரட்டியுள்ளான்.
உடனே அந்தப் பெண் அனைத்து சமூக வலைத்தளக் கணக்கிலும் குற்றவாளியை முடக்கினார்.ஆனால்,அந்த நபர் மைக்ரோசாப்ட் டீம் செயலியில் தகாத வார்த்தைகளால் துன்புறுத்தியுள்ளான்.
குற்றவாளியின் தொல்லையைத் தாங்க முடியாத பெண்,இறுதியாக ஜூலை 4, 2020 அன்று அந்த நபருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார்.நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னர் அவருக்கு மருத்துவமனையில் மனநல சோதனை செய்யப்பட்டது.
அவர் ஒரு பெரிய மனச்சோர்வைக் கொண்டிருந்ததாக மனநல மருத்துவர் தெரிவித்தார்.எனவே, நீதிமன்றத்தில் கட்டாய சிகிச்சை ஆணை விதிக்கப்பட்டது.