இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரில் மழையை எதிர்பார்க்கலாம்- வானிலை ஆய்வு மையம்…

Image Credits : AFP/Roslan Rahman

இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரில் மழையை எதிர்பார்க்கலாம், என்றும் அதே நேரத்தில் சூடான பருவநிலையும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தோராயமாக ஆறிலிருந்து எட்டு நாட்கள் வரை முற்பகலுக்கும், பிற்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் மிதமான அளவிலிருந்து கனமான அளவு வரை குறுகிய நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம், என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு நாளில் காலை நேரத்தில் இடியுடன் கூடிய பரவலான மழையையும், வேகமான காற்றையும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறியுள்ளது.

அதே நேரத்தில் பெரும்பாலான நாட்களில் வெப்பமான பருவநிலையும் நீடிக்கும். பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கும், 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.

ஒரு சில நாட்களில் பிற்பகல் நேரத்தில் வழக்கமான உச்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வகம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

Source : Seithi MediaCorp