வேலைவாய்ப்பு ஆதரவு திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – NTUC தலைமைச் செலயாளர்..!

Extension of Jobs Support Scheme should be considered: Labour chief Ng Chee Meng
Labour chief Ng Chee Meng (Photo: TODAY)

பலவீனமான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு ஆதரவு திட்டத்தை (JSS) விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் (NTUC) தலைமைச் செலயாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளத்தை ஈடுசெய்த பிறகு, ஊதிய மானியத் திட்டம் காலாவதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19 தடுப்பு மருந்து உலகளவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது முக்கியம் – சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா இணக்கம்..!

கொள்கை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நிறுவனம் இருந்தால், வேலை ஆதரவுத் திட்டத்தை விரிவாக்குவது பற்றி சிந்திக்க அரசாங்கத்திற்கு பரிசீலிப்பதாக திரு இங் கூறினார்.

மேலும், வேலையின்மை மற்றும் வர்த்தக மூடல்களைத் தடுக்க அரசாங்கம் வேலை ஆதரவுத் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஈகிள் சர்வீசஸ் ஆசியாவின் (Eagle Services Asia) சமீபத்திய ஊழியர்கள் பணிநீக்க முயற்சியில், நிறுவனம் தனது ஊழியர்களை விடுவிப்பதில் சரியான செயல்முறையை பின்பற்றவில்லை, அதனால்தான் சட்டரீதியான தொழில்துறை நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கங்களுக்கு அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இது 1986க்குப் பிறகு சிங்கப்பூரில் நடந்த முதல் சட்டபூர்வமான வேலைநிறுத்தமாக இருந்திருக்கும், ஆனால் தொழிற்சங்கத்தினருக்கும் நிறுவனத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட பின்னர் அது தவிர்க்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆள்குறைப்பு நடைமுறையானது, முதலில் வெளிப்படையாகவும் நியாயமாகவும் அந்நிறுவனத்தில் அமைந்திருக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும், பேச்சுவார்த்தையில் இருக்கும்போதே, சில ஊழியர்கள் வேலையை விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் திரு. இங் கூறினார்.

ஈகிள் சர்வீசஸ் ஆசியாவின் பணிநீக்கங்களின் இறுதி பட்டியலில் உள்நாட்டு ஊழியர்கள் 44 சதவீதம் பேர் இருந்தனர். இது தொழிற்சங்க தலையீட்டிற்கு முன் 56 சதவீதமாக இருந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 127 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg