SingPass வைத்திருப்பவர்கள் ஒரு செல்பீ மூலம் DBS டிஜிட்டல் வங்கி சேவைகளை பெறலாம்..!

Face verification technology to allow SingPass holders to sign up for DBS digital banking services using a selfie
Face verification technology to allow SingPass holders to sign up for DBS digital banking services using a selfie (Photo: DBS, GovTech)

COVID-19 கிருமித்தொற்றுக்கு மத்தியில் டிஜிட்டல் வங்கி சேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, முகம் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புகைப்படம் எடுத்து அதன் மூலம் சிங்பாஸ் வைத்திருப்பவர்கள் DBS டிஜிட்டல் வங்கி சேவைகளை பெற முடியும்.

இதன் மூலம் SingPass வைத்திருப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தாத சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான DBS வாடிக்கையாளர்களுக்கு பயனளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிங்கப்பூரின் வங்கி மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனம் (GovTech) புதன்கிழமை (ஜூலை 29) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரவு நேரத்தில் கைவிடப்பட்ட குழந்தை கண்டுபிடிப்பு – காவல்துறை விசாரணை..!

வாடிக்கையாளர்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் 62 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர். இந்த கிருமிதொற்று பரவல் சூழலில் அதிகமான மூத்தவர்கள் டிஜிட்டல் வங்கி சேவையின் பக்கம் திரும்பியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்திய மூத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

முதன்முறையாக டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு பயனளிப்பதும் இந்த சேவையின் நோக்கமாகும் என்று DBS வங்கியின் நுகர்வோர் வங்கி குழுவின் (சிங்கப்பூர்) தலைவர் திரு ஜெர்மி சூ (Jeremy Soo) கூறியுள்ளார்.

GovTech-ன் சமீபத்திய சேவையை செயல்படுத்திய முதல் வங்கி DBS ஆகும்.

ஒரு செல்ஃபி மூலம் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், டிஜிட்டல் வங்கி சேவையை பெற முடியும். இதன் மூலம் DBS டிஜிட்டல் வங்கி சேவைகளை தங்கள் வீடுகளிலிருந்து பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்ததை தொடர்ந்து வங்கி கணக்குகள் மற்றும் வங்கி சேவைகளை உடனடியாக பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg