சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள் – இளைஞர்களே உஷார்!

Be Aware of Fake Agents

போலி ஏஜெண்டுகளை நம்பி வாழ்க்கையை இழக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்ளுக்கான விழிப்புணர் பதிவு இது.

முகநூலில் துறை கோபி என்பவர் தனது பக்கத்தில் போலி ஏஜெண்டுகளை நம்பி பணத்தையும், தன்னுடைய வாழ்க்கையில் இழக்கும் படித்த இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு அருமையான காணொளியை பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த காணொளியில் அவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டு ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.

வளர்ந்து வரும் தகவல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக முகநூல், வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலி ஏஜெண்டுகள் தங்களின் வலையை விரித்து, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர். இதன் உண்மை தன்மையை அறியாமல் இளைஞர்கள் ‘வெளிநாட்டில் வேலை’ என்ற ஒற்றை சொல்லுக்கு அடிமையாய் தன்னுடைய பணத்தையும், நேரத்தையும் குறிப்பாக வாழ்க்கையையும் இழந்து நிர்கதியாய் நிற்பதை பார்த்து வருகிறோம்.

இதையே மிக தெளிவாக துறை கோபி அவர்கள் முகநூல் நேரலை மூலம் விளக்கினார். சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இளைஞருக்கு போலி ஏஜெண்டு ‘ஆஃபர் கடிதம்’ அனுப்பியுள்ளது. அந்த இளைஞர் துறை கோபியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க இது பொய்யான கடிதம் என்று உறுதியாக கூறி, அந்த ஏஜெண்ட்யை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் அந்த ஏஜெண்டு அழைப்பை ஏற்கவில்லை.

இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள போலி கும்பல் குறிப்பாக தமிழ்நாடு இளைஞர்களை குறிவைத்து இந்த காயை நகர்த்தி வருகிறது. மேலும், சிங்கப்பூர் ஒரு அருமையான நாடு, என்னை வாழ வைத்த நாடு, இந்த நாட்டின் பெயரை சொல்லி ஏமாற்றுவதை நான் ஒருபோதும் ஏற்க்கமட்டேன், என்று கோபி கூறினார்.

இறுதியாக அழைப்பை ஏற்று அந்த ஏஜெண்டு அவரிடம் சரியாக பேசவில்லை, இணைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டார். படித்த இளைஞர்கள் மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கோபி இறுதியாக கேட்டுக்கொண்டார்.

இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு என்பது படித்த இளைஞர்களுக்கு எட்டா கனியாக இருந்து வருகிறது. இதுபோன்ற ஏஜெண்டுகள் வேலைவாய்ப்பு தருகிறோம், என்று கூறியவுடன் கண்மூடி தனமாக அப்படியே அதை நம்பி இளைஞர்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

வேலை வாய்ப்பு செய்தி உண்மை தன்மையை முதலில் உறுதி செய்ய, குறிப்பிட்டுள்ள அந்நிறுவன இணையமுகவரியில் உள்ள தொலை தொடர்பு எங்களை தொடர்பு கொள்ளலாம், அல்லது மின் அஞ்சல் மூலம் அந்நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தேவை இருக்கிறதா! என்பதை நன்கு பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் போலி ஏஜெண்டுகளை தவிர்க்கலாம்.

துரை கோபி அவர்களின் முகநூல் பதிவு:

https://m.facebook.com/story.php?story_fbid=2391408737783396&id=100007428796141