“நாகூர் டிரேடிங்” என்ற போலியான நிறுவனம்… S$8 மில்லியன் மோசடி – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர்

சட்டவிரோத கும்பலை சேர்ந்த ஒருவர் “நாகூர் டிரேடிங்” என்ற போலியான நிறுவனத்தின்கீழ் 180க்கும் மேற்பட்ட விலைப்பட்டியல்களை (invoices) போலியாக தயாரித்துள்ளார்.

அதன் மூலம் அவர் குறைந்தபட்சம் S$56 மில்லியன் விற்பனை செய்ததாக பொய்யாக தகவல் கூறியுள்ளார்.

கல்லாங் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் – போலீஸ் விசாரணை

நாகூர் டிரேடிங் தொடர்புடைய குற்றங்களின் விளைவாக, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (Iras) மொத்தம் S$8 மில்லியன் மதிப்பில் மோசடியான உள்ளீட்டு வரிக் கோரிக்கைகள் செய்யப்பட்டன.

இந்த கோரிக்கைகளின் ஒரு பகுதியை Iras கண்டறிந்து நிறுத்தி வைக்க முடிந்தாலும், சரக்கு மற்றும் சேவை வரி (GST) திருப்பிச் செலுத்திய தொகை கணிசமான அளவு என்று விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில், ஆல்வின் சுவா ஹான் சூன் (44) என்ற அவருக்கு திங்கள்கிழமை நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மோசடி நோக்கத்திற்காக நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 7 பேரிடம் போலீசார் விசாரணை