போலி ஓட்டுநர் உரிமம்… சிக்கிய வெளிநாட்டவர் – உடனே கைது செய்த போலீஸ்

வெளிநாட்டு ஊழியரை

போலி ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொண்டு அனுமதிக்கு (Pass) விண்ணப்பித்த வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவர் போலி மலேசிய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி, அதை வைத்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அனுமதிக்கு (Pass) விண்ணப்பித்ததாக கூறப்பட்டுள்ளது.

தோ பாயோவில் தீ விபத்து: 50 பேர் வெளியேற்றம்

இந்நிலையில், 41 வயதுமிக்க அந்த ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) கைது செய்யப்பட்டார்.

இது குறித்த புகாரைப் பெற்றதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அந்த Pass அனுமதி, Frequent Traveller Programme என்றும் அறியப்படுகிறது, இதற்கு தகுதியான பயணிகள் தானியங்கி அனுமதி வசதிகள் மூலம் குடிநுழைவு அனுமதி செயல்முறைகளை இலகுவாக அமைத்துக்கொள்ள முடியும்.

போலி ஆவணத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக அந்த நபர் மீது இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் ஊழியர்களின் திறமைக்கு இனி தனி மதிப்பு… 20,000 ஊழியர்கள் முதல் இலக்கு!