உறவுகளை பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்கள்… திறமைகளை விட்டு பிரிவதில்லை!

(PHOTO: Bloomberg)

உறவுகளை பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய விளையாட்டு, நடனம், சமையல் மற்றும் கவிதை போன்றவற்றில் ஆர்வம் கொண்டு வெளிப்படுத்திவருவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிய காணொளி தொடர், சிங்கப்பூர் சோனெட்ஸ் (SINGAPORE SONNETS) என்னும் பெயரில் ஆறு பாகங்கள் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 329 பேர் கைது

இந்த தொடரில் கபடி விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற ஒரு ஊழியர் மற்றும் வலைஒளியில் கவிதை வாசிக்கும் கட்டுமானத் தொழிலாளி ஆகிய வெளிநாட்டு ஊழியர்களின் கதைகளும் கூறப்படுகின்றன.

மேலும், இந்த ஊழியர்கள் சிங்கப்பூரில் வசிப்பது குறித்தும் தங்களுடைய சொந்த நாடுகளில் வாழ்ந்த வாழ்க்கைப்பற்றியும் பேசுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கபடியில் ஆர்வம் கொண்ட வெளிநாட்டு ஊழியரான அண்ணாதுரை சுந்தர் AC தொழில்நுட்பராக வேலை செய்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் தேசிய அளவில் நடந்த கபடி போட்டியில் தங்கப்பதக்கங்கள் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய கபடி குழு ஒன்றை சிங்கப்பூருக்காக உருவாக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்று அவர் தெரிவித்துள்ளார்.

அப்பர் புக்கிட் திமாவில் மரத்தில் இறந்த நிலையில் தொங்கிய ஆடவர்