சிங்கப்பூர் ஹோட்டல்களில் உடனடி செக்-இன் : புதிய வசதி அறிமுகம்

faster check in at singapore hotels
faster check in at singapore hotels

சிங்கப்பூர் அரசு தனது நாட்டின் ஹோட்டல்களில், வாடிக்கையாளர்கள் செக் இன் செய்யும் சிக்கல்களில் இருந்து விடுபட புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இந்த முறை மூலம் பயணிகளின் 70 சதவிகித நேரம் மிச்சமாவதுடன், அவர்கள் உடனடியாக சிறந்த ஹோட்டல்களை கண்டறிந்து அங்கு சென்று இளைப்பாறவும் வழிவகை ஏற்படுவதாகவும் ஆண்டிற்கு அந்நாட்டின் ஹோட்டல் ஊழியர்களின் 11 ஆயிரம் மணிநேரமும் மிச்சமாகும் என்று தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின் பார்வையாளர் அங்கீகாரம் E-Visitor Authentication (EVA) என்ற இந்த புதிய நடைமுறை மூலம் ஒரு நிமிடத்தில் குடியுரிமை மற்றும் சோதனை மைய ஆணையத்திற்கு பயணிகளின் புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு உடனடியாக ஹோட்டல் சாவியும் கையில் கொடுக்கப்பட்டு விடும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடைமுறை ஏற்கனவே Ascott Orchard, Swissotel The Stamford, Grand Park City Hall ஆகிய ஹோட்டல்களில் அமலில் உள்ளன.

இந்த புதிய நடைமுறை மூலம், பயணிகளின் பாஸ்போர்ட் ஸ்கேன் செய்யப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களுக்கு தேவையான ஹோட்டல்களின் சாவியும் உடனடியாக வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் பயணிகளின் சிரமம் அதிகளவில் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய முயற்சியால், ஹோட்டல்களில் இருந்து வந்து விமானநிலையங்களில் செயல்படும் ஊழியர்களின் நேரம் ஆண்டிற்கு 11 மணிநேரங்கள் மிச்சமாகும் என்று சிங்கப்பூரின் தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் சீ ஹாங் தட் தெரிவித்துள்ளார்.