வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அன்பளிப்புப் பொட்டலங்கள்..!

It is reported that over 2,00,000 foreign workers in Singapore were given gift packs in front of the fast on May 24.
It is reported that over 2,00,000 foreign workers in Singapore were given gift packs in front of the fast on May 24. (Photo: Zaqy Mohamad/Facebook)

சிங்கப்பூரில் 2,00,000க்கு அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு மே 24 நோன்புப் பெருநாளை முன்னிட்டு அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அன்பளிப்புப் பொட்டலங்களில் உணவு மற்றும் விழாக்காலப் பொருள்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. நோன்புப் பெருநாள் சிறப்புத் தின்பண்டங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மேலும் 548 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு மதிய உணவு மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் போன்றவை சிறப்பம்சங்கள்.

Special lunches for foreign workers such as mutton biryani and chicken
Special lunches for foreign workers such as mutton biryani and chicken. (PHoto: Zaqy Mohamad/Facebook)

இஸ்லாமியச் சமய மன்றம் (MUIS), அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு மற்றும் சிங்கப்பூர் மலாய் வர்த்தக தொழில் சபை ஆகியவை இணைந்து அதற்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்ப் பள்ளிவாசல்களும், மேலும் 16 சமூக அமைப்புகளும் அதற்கு நன்கொடை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிரமமான காலக்கட்டத்தில் வெளிநாட்டில் தங்கியிருக்க நேர்ந்துள்ள முஸ்லிம் ஊழியர்களுக்கு, சிங்கப்பூர் மலாய் முஸ்லிம்களின் அக்கறை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைத் தெரிவிக்க அது சிறந்த வழி என்று மனிதவளத் துணை அமைச்சர் ஸாக்கி முகமது கூறியுள்ளார் என்று செய்தி மீடியாகார்ப் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: COVID-19 தொற்றிலுருந்து குணமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் 2 சொகுசுக் கப்பல்களில் தங்கவைப்பு..!