PIE மேம்பாலம் விழுந்த சம்பவம்: 11 வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக குற்றம் நிரூபணம்!

Fatal PIE viaduct collapse
(PHOTO: TODAY)

அப்பர் சாங்கி சாலை ஈஸ்ட்டில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலை (PIE) மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய ஒப்பந்தக்காரர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயகரமான சம்பவத்திற்கு தொடர்புடையதாக மேலும் இரண்டு மூத்த ஊழியர்கள் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று!

Kim Peow (OKP) ஒப்பந்தக்காரர்கள், 11 வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக நேற்று (ஜன. 22) குற்றம் நிரூபணம் ஆனது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று, கட்டுமானப் பணியின் போது அந்த PIE மேம்பாலம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின்போது வேலை செய்து கொண்டிருந்த 31 வயதான சீன நாட்டைச் சேர்ந்த சென் யின்ச்சுவான் (Chen Yinchuan) என்ற ஊழியர் உயிரிழந்தார்.

மேலும், மற்ற 10 ஊழியர்களுக்கு முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவுகள் உட்பட பலவிதமான காயங்கள் ஏற்றப்பட்டன.

OKPஇன் திட்ட இயக்குனர் யீ சீ கியோங் (Yee Chee Keong), மற்றும் அதன் திட்ட பொறியாளர் வோங் கீவ் ஹை (Wong Kiew Hai), ஆகியோர் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இது தொடர்புடைய அவர்கள் இருவருக்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடலை நீக்கியாக இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதில் மேம்பாலம் விரிசல்கள் தொடர்பான புகைப்படங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன புத்தாண்டு: சிங்கப்பூரில் அதிகரிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்!