‘உலக தந்தையர் தினம்’- சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

Photo:

 

உலக தந்தையர் தினம் இன்று (20/06/2021) உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் தந்தைக்கு பரிசுகளை வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடி உங்கள் தந்தையுடன் இந்த தினத்தை கொண்டாட சூப்பரான சில டிப்ஸ்..!

 

கொரோனா நேரத்தில் வெளியே செல்வது பாதுகாப்பற்றது. அதேசமயம் ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடி உங்கள் தந்தையுடன் இந்த தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.

 

தந்தையும் நீங்களும் இணைந்து இன்று சமையல் செய்ய களம் இறங்குங்கள். இந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும். வீட்டிலேயே கேரம், செஸ் உள்ளிட்ட வீட்டிற்குள்ளேயே விளையாடக்கூடிய இண்டோர் கேம்களை தந்தை மற்றும் குடும்பத்தினருடன் விளையாடலாம்.

 

பிள்ளைகள் மட்டுமல்லாது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவருக்கு நன்றியை பகிர்ந்துக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே அவரை அமர வைத்துவிட்டு அவருக்காக நடனம், கவிதை, பாட்டு, நாடகம் என குடும்பத்தினர் அனைவரும் செய்து காட்டலாம்.

 

உலக தந்தையர் தினத்தையொட்டி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “எல்லா தந்தையர்களுக்கும், பெரிய தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். பல ஆண்டுகளாக தந்தை வழி கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தந்தையின் பங்கு குழந்தைகளை தாய்மார்களிடம் விட்டுச் சென்று குடும்பத்திற்காக வேலை செய்து பணம் சம்பாதிப்பது. குழந்தைகளை வளர்ப்பது ஆகும். மேலும், சமீபத்திய ஆண்டுகளில் தந்தைகள் அதிக பெற்றோருக்குரிய கடமைகளை மேற்கொள்வதில் இருந்து வெளியேறியுள்ளனர். தொற்று நோய் ஒரு சவாலாகவும், தந்தைகளுக்கு தங்கள் குழந்தைகளை வளர்க்க உதவுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.