“வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலை” உள்ளிட்டவற்றை கவனிக்க தவறிய 7 கடைகள் மூட உத்தரவு

Photo: MSE

சிங்கப்பூரின் COVID-19 கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை மீறியதற்காக ஏழு உணவு மற்றும் பான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று (டிசம்பர் 22) தெரிவித்துள்ளது.

நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”

அந்த கடைகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான தொடர்பைக் கட்டுப்படுத்த தவறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையை அவர்கள் நுழைவதற்கு முன்பு சரிபார்க்க அமைப்பு முறையை ஏற்படுத்தாதது ஆகியவை அந்த குற்றங்களில் அடங்கும் என்று MSE தெரிவித்துள்ளது.

மூட உத்தரவிடப்பட்ட கடைகளில், இரண்டு நிறுவனங்கள் மீண்டும் ஒரே குற்றத்தில் ஈடுபட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது அந்த இரு கடைகள், Magazine சாலையில் உள்ள சென்ட்ரல் மாலில் அமைந்துள்ள HARU மற்றும் Tanglin ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள Euphoria ஆகியவை.

HARU – டிசம்பர் 22 முதல் ஜனவரி 30, 2022 வரை 40 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. அதே போல Euphoria – டிசம்பர் 18 முதல் ஜனவரி 6, 2022 வரை 20 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

மீதமுள்ள ஐந்து நிறுவனங்களை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

TravelUpdate: VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமை – மீறினால் நடவடிக்கை