உலகக்கோப்பை கால்பந்து போட்டியையொட்டி, நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி!

File Photo

22-வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, கத்தார் நாட்டில் நேற்று (20/11/2022) கோலாகலமாகத் தொடங்கியது. வரும் டிசம்பர் 18- ஆம் தேதி வரை 29 நாட்கள் கால்பந்து திருவிழா நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த 32 அணிகளும் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘அங்கே என்ன தெரிகிறது’ தவழ்ந்து சென்ற மனைவிக்கு குவிந்த லைக்குகள்! – ‘மாட்டிகிட்ட பங்கு’ தருணம்; கணவரின் நிதானத்திற்கு பாராட்டு!

இந்த நிலையில், உலகக்கோப்பைப் போட்டியைக் காண உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான தங்கும் விடுதி, உணவு, பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல், உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவால் கத்தாரில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கத்தார் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தார் நாட்டில் முட்டை தேவை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி முட்டையின் அளவு இரு மடங்காக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,000- க்கும் மேற்பட்ட கோழி முட்டை பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கான சேவை! – மனிதவள அமைச்சகத்தின் ஆதரவுடன் திறக்கப்பட்டுள்ள மையம்

பஹ்ரைன், சவூதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கு மாதந்தோறும் 2 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் கத்தார் நாட்டிற்கு மட்டும் மாதந்தோறும் சுமார் 50 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கத்தார் நாட்டிற்கு மட்டும் சுமார் 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற நாடுகளை விட நாமக்கல் முட்டை விலை குறைவாக இருப்பதால், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.