உலகக்கோப்பை கால்பந்து தொடர்: சிங்கப்பூர், கத்தார் இடையே நேரடி விமான சேவையை வழங்கி வரும் கத்தார் ஏர்வேஸ்!

Photo: Qatar Airways Official Twitter Page

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை (20/11/2022) கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக மட்டும் கத்தார் அரசு சுமார் 220 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்நாட்டு அரசு செய்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்… குழந்தைகள் இருக்கா?? – அப்போ உங்களுக்கு தான் இந்த ComLink ஆதரவு திட்டம்

குறிப்பாக, கால்பந்து ரசிகர்கள் வந்து செல்ல ஏதுவாக, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கத்தார் நாட்டிற்கான விமான சேவையை கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் (Qatar Airways) அதிகரித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களுக்காக விமான சேவையை அதிகரித்துள்ளது கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம்.

அதன்படி, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது.  மேலும், சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர் வழியாகவும் கத்தார் நாட்டிற்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை கத்தார் ஏர்வேஸ் வழங்கி வருகிறது.

கண்ணாடி கதவு உடைந்து விழுந்து இரண்டு வயது குழந்தை காயம்! – பதறிச் சென்று கட்டியணைத்த பாட்டி!

நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் https://www.qatarairways.com/en-in/homepage.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.