சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு COVID-19 வைரஸ் தொற்று – தூதரகம்..!

Filipino national tests positive for COVID-19 in Singapore: Embassy
Filipino national tests positive for COVID-19 in Singapore: Embassy (Photo : REUTERS/Edgar Su)

சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என பிலிப்பைன்ஸ் தூதரகம் திங்களன்று (பிப்ரவரி 24) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உறுதிசெய்யப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தொற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் சம்பவம் ஆகும். சிங்கப்பூரில் 89வது சம்பவமாக உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் COVID-19 பாதிக்கப்பட்ட 3 புதிய நபர்கள் உறுதி..!

முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்த நபர் தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தூதரகம் கூறியுள்ளது.

நோயாளியின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து எதுவும் பகிரப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் தூதரகம் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பிலும் ஒருங்கிணைப்பிலும் உள்ளது.

மேலும் நோயாளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிலிப்பைன்ஸ் தூதரகம் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Source : CNA

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்கள் உட்பட 19 நபர்களுக்கு தண்டனை..!