இரண்டாம் காலாண்டில் பணியிடத்தில் ஆட்குறைப்பு அதிகரிப்பு!

15 companies temporarily barred from hiring foreign workers during heightened safety period

 

கொரோனா பரவலைத் தடுக்க, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி குறித்த நிலவரம் – இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?

இந்த நிலையில், சிங்கப்பூரில் நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் முதல் மிகப்பெரிய வர்த்தக தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பொருளாதார ரீதியிலாகப் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால், அனைத்து தரப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும், இரண்டாம் காலாண்டில் பணியிடங்களில் ஆட்குறைப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தது. அதேபோல், பல தொழிலாளர்களுக்கு குறைவான வேலை நாட்கள் வழங்கப்பட்டனர். சில தொழிலாளர்கள் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. இதன் விளைவாக பணியிடங்களில் ஆட்குறைப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் காலாண்டில் சுமார் 2,270 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டாம் காலாண்டில் 2,340-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

‘The Online Citizen’ இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கம்!

இதனிடையே, கடந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 92,100 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.