சிங்கப்பூர் Sembawang Crescent பிளாக்கில் தீ விபத்து!

Fire at a 12th floor unit at Block 364B Sembawang Crescent. (Photo: SCDF)

சிங்கப்பூர் 364B Sembawang Crescent பிளாக் 12 Floor -இல் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை 5.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. SCDF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

லிவிங் அறையில் ஏற்பட்ட தீயை SCDF வீரர்கள் குழாய் ரீல் மற்றும் இரண்டு Compressed Air Foam Backpacks -யை பயன்படுத்தி அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில், PMD சாதனம் சார்ஜிங் செய்தது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

இந்த PMD சாதனம் விபத்து குறித்து SCDF சில பாதுகாப்பு குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க அனைத்து PMD உரிமையாளர்களையும் UL2272 சான்றளிக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த LTA ஊக்குவிக்கிறது. மேலும், PMD ஐ வாங்கும் போது, UL2272 சான்றிதழை சரிபார்த்து வாங்கவும் அறிவுறுத்தி உள்ளது.

PMD/PAB சாதனங்களை பயன்படுத்திய உடனே சார்ஜ் செய்வது தவிர்க்க வேண்டும்.

மேலும், UL2272 சான்றிதழ் பற்றிய கூடுதல் தகவலுக்கும் LTA இன் வலைத்தளத்தைப் (bit.ly/ul2272sg) பார்க்கவும்.