சிங்கப்பூர் துவாஸ் தொழிற்சாலைப் பகுதியில் தீ விபத்து..!

Fire breaks out in an industrial area in Tuas
Fire breaks out in an industrial area in Tuas (Photo : SCDF)

சிங்கப்பூர், துவாஸில் ஒரு தொழிற்சாலைப் பகுதியில் நேற்று இரவு (மார்ச் 17) ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டவந்தனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதையும் படிங்க : மலேசியர்கள் வெளிநாடு செல்லத் தடை; கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடல்..!

நேற்று இரவு 9.45 மணிக்கு, 7 துவாஸ் அவென்யூ 18-ல் ஏற்பட்ட இந்த தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீயணைப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதி பெருமளவில் புகைகளால் நிரம்பியுள்ளது. பொதுமக்கள் இப்பகுதியில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று SCDF கூறியிருந்தது.

மேலும், பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுவதாகவும் அது கூறியிருந்தது.

இதில் தீ, 5 மாடி உயரமான கிடங்கில் பரவியதாகவும், மேலும் வடிகால்களிலும் பரவி வருவதாகவும் SCDF தெரிவித்திருருந்தது குறிப்பிடத்தக்கது.

துரிதமாக செயல்பட்டு, 33 அவசரகால வாகனங்களுடன், சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரேநாளில் புதிதாக 23 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!