சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை நிலவரம்..!

First 2 weeks of August expected to be warm
First 2 weeks of August expected to be warm (Photo: TODAY)

சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்கள், ஜூலை மாதத்தை விட வெப்பமானதாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.

அச்சமயம், தினசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் அடுத்த மாதம் சில நாட்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையும் ஒரு சில இரவுகளில் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள தென்மேற்கு பருவமழை காலநிலை ஆகஸ்ட் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் பாதியில், தென்கிழக்கு அல்லது தென்மேற்கில் இருந்து குறைந்த அளவிலான காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.

சில நாட்களில் காலையிலும் பிற்பகலிலும், தீவின் சில பகுதிகளில் மிதமான முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் 2 வாரங்களுக்கு, மழைப்பொழிவானது சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட சற்று குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊட்டச் சத்து மிக்க அரிசி – தினசரி 12,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg