சிங்கப்பூரில் மேலும் 5 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – MOH..!

COVID-19: Five new clusters have also been identified in Singapore - MOH
COVID-19: Five new clusters have also been identified in Singapore - MOH (Photo: Raj Nadarajan/TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 8) நிலவரப்படி, புதிதாக 768 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 21,707ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வெளிநாட்டு ஊழியர் மீது குற்றச்சாட்டு..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 7 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் சிங்கப்பூர் குடிமக்கள். மேலும், நிரந்தரவாசிகள் மற்றும் வேலை அனுமதி பெற்றவர்கள் இருவர் அடங்குவர்.

புதிய குழுமங்கள்

மேலும் 5 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 25 Kaki Bukit Industrial Terrace
  • 63 Senoko Drive
  • 53 Sungei Kadut Loop
  • 11 Tech Park Crescent
  • 57 Tuas View Walk 2

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் 328 நபர்கள் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!