சிங்கப்பூரில் பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் திடீர் வெள்ளம்..!

Flash floods reported in parts of Singapore after heavy rain
Flash floods reported in parts of Singapore after heavy rain (Photo: Nicholas Ong)

சிங்கப்பூரின் சில பகுதிகளில் இன்று (ஜூன் 23) காலையில் பலத்த மழை பெய்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இன்று காலை 6.30 மணியளவில், சிங்கப்பூரின் பல பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) எச்சரித்தது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் பாதிப்பு..!

மேலும், கனமழை ஏற்பட்டால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று PUB கூறியதாக NEA தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

காலை 11 மணி குறிப்பில், சிங்கப்பூரின் பல பகுதிகளில் மதியம் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

சாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள அப்பர் சாங்கி சாலையில், ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு லாரி ஆகியவை வெள்ளத்தில் செல்வதை படத்தில் காணலாம்.

(Photo: Nicholas Ong)

பெடோக்கின் பல பகுதிகளிலும், குறிப்பாக பெடோக் கேணல் அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, அந்த பகுதி தண்ணீரால் நிரம்பி வழிகிறது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg