சிங்கப்பூரில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட வரும் நாட்களில் அனுமதி.!

Food and beverage eating
Pic: Google Maps

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வரும் வாரங்களில் கட்டுக்குள் இருந்தால் ஜூன் 21ம் தேதி முதல் உணவு மற்றும் பானக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

குழுக்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி, ஒரு மேசையில் ஐந்து பேர் மட்டுமே அமர அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை தொடர்பான திட்டங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு!

உணவு மற்றும் பானக் கடைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு உண்ணும் போதும், பானம் அருந்தும் போதும் மட்டும் முகக்கவசத்தை கழற்றலாம், மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும்.

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய சொன்ன அதிகாரிக்கும், கடைக்காரருக்கும் இடையே கைகலப்பு.!