சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள்..!

(Photo: Amnesty)

ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கும், வசதிகுறைந்த குடும்பங்களுக்கும், இந்த நோன்பு மாதத்தில் வழங்கப்படவுள்ளன.

மெண்டாக்கி சுய உதவிக் குழு, Furama ஹோட்டல்களுடன் இணைந்து இந்த உணவு வழங்குவதில் செயல்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 495 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!

நோன்பாளிகளுக்கு உணவளிக்கும் SGUnited Buka Puasa திட்டத்தின் கீழ் அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோன்பு மாதம் முழுவதும் முதல் அணி ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தேவைப்படும் குடும்பங்களுக்கும் 20 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது அந்தத் திட்டத்தின் ஓர் அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முயற்சிக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது. உணவைப் பெறுவதற்காக அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக மெண்டாக்கி கூறியுள்ளது.

இன்னும் அதிகமானோருக்கு உணவு வழங்க உதவும் வகையில் SGUnited Buka Puasa திட்டத்துக்காகத் திரட்டப்பட வேண்டிய நிதி 2 மில்லியன் வெள்ளியிலிருந்து 3 மில்லியன் வெள்ளியிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது என்று செய்தி மீடியாகார்ப் தெரிவித்துள்ளது.

Source: Seithi MediaCorp

இதையும் படிங்க: சிங்கப்பூர் புங்க்கோல் பீல்ட் கொலை சம்பவம்: 20 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு..!