வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் கறார்

Pic: Jeremy Long

சிங்கப்பூருக்குள் உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கும் புதிய அறிவிப்பை போக்குவரத்துக் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

ஓட்டுனர்கள் சிங்கப்பூரின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் அதனை மதித்தும் நடக்க வேண்டும் என்பதை அது தெளிவுப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேருக்கு குரங்கம்மை; மெல்ல மெல்ல அதிகரிக்கும் பாதிப்புகள்

நினைவூட்டல் என்னவென்றால், முன்னர் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அபராதங்களை முறையாக செலுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாகனங்கள் சிங்கப்பூருக்குள் வழக்கம் போல வந்து செல்கின்றன.

2019 ஏப்ரல் மாதம் முதல் நடப்பில் உள்ள சட்டத்தின்படி, அபராதம் செலுத்த தவறிய வாகனங்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி இனி மறுக்கப்படும் என்று அவைகள் கூறியுள்ளன.

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் எட்டு பேர் மட்டுமே ஊழியர்களுக்கு இதை செய்கின்றனர்…