சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!

Foreign worker apprehended after standing on ledge outside window at Kaki Bukit dormitory
Foreign worker apprehended after standing on ledge outside window at Kaki Bukit dormitory (PHOTO: Singapore Eye/FB)

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 31 அன்று நள்ளிரவு காக்கி புக்கிட் வீட்டு வசதியில், தி லியோ (The Leo) வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதியில் ஜன்னல் கீழ் பகுதியில் உள்ள விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மனநலச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அந்த தங்கும் விடுதியில் 7வது தளத்தில், ஜன்னல் விளிம்பில் ஊழியர் நின்று கொண்டு இருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு உதவ மேலும் 8 வேலை நிலையங்கள் திறப்பு..!

27 வயதான அந்த ஊழியர் ஒரு கையில் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தார் என்றும், மறுபுறம் முகக்கவசம் போன்ற ஒரு கருப்பு பொருள் ஒன்றை கையில் வைத்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தங்கும் விடுதியில் மற்ற குடியிருப்பாளர்களுடன் பேசுவதாகத் காணொளியில் தோன்றுகிறது, அவரின் கையைப் பிடிக்க ஒருவர் முயற்சி செய்வதும், ஆனால் அவர் அதை மறுப்பதும் காணொளியில் தெரிகிறது.

#网友爆料 客工宿舍又有外劳想要跳楼!情况一度非常危急,幸好他最后被其他劳工救下。警方正在进行调查。A migrant worker attempt to suicide at Kaki Bukit dormitory, fortunately he was rescued in time!

Posted by 新加坡眼 Singapore Eye on Thursday, July 30, 2020

சிறிது நேரம் கழித்து, யூனிட்டில் இருந்த மற்றவர்கள் அவரை வெற்றிகரமாக சமாதானப்படுத்தி, ஜன்னல் வழியாக பிளாட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து விடுதியில் உள்ள மற்ற அனைவருக்கும் உற்சாகம் ஏற்பட்டது.

பின்னர், அதிகாலை 12:07 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை மற்றும் துணை மருத்துவர்களும் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவரை மனநலச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.

மனிதவள அமைச்சின் (MOM) வலைத்தளத்தின்படி, COVID-19 அபாயம் இல்லாத தங்குமிடமாக அந்த விடுதி பட்டியலிடப்படவில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை – MOM..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Twitter      – https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  – https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat  https://sharechat.com/tamilmicsetsg

Related posts