வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடுத்த மாதம் முதல் கொரோனா இருக்காது.!

(Photo: Today)

சிங்கப்பூரில், பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடுத்த மாதம் தொடக்கத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் எட்டு விடுதிகளில் உள்ள 17 பிளாக்குகளைத் தவிர, மற்ற அனைத்து விடுதிகளிலும் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து கொரோனா தொற்று முழுவதுமாக இருக்காது என சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,
அந்த 17 பிளாக்குகளில் வசிக்கும் 28,000 ஊழியர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருப்பார்கள் என்றும், அடுத்த மாதத்தின் முதல் வார இறுதிக்குள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “சிங்கப்பூரில் இந்த ஆண்டு வித்தியாசமான ஒரு தேசிய தின கொண்டாட்டமாக இருக்கும்” – பிரதமர் லீ..!

மேலும், சுகாதார அமைச்சகம் கூறுகையில், அந்த ஊழியர்கள் கிருமித்தொற்று அதிகம் உள்ள விடுதிகளில் வசித்தவர்கள் என்பதால் அவர்களில் பலருக்கு கிருமித்தொற்றுக்கு  இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இது அடுத்த இரண்டு வாரங்களுக்கு கிருமித்தொற்று பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கையானது குறைந்துவிடும் என்றும், ஊழியர்கள் பணிக்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் முதலாளிகளுடன் இணைந்து மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் திரு வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg