தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சவரக்கருவி வாங்க சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு அபராதம்..!

Foreign worker fined for breaching quarantine to buy a shaver for work the next day
Foreign worker fined for breaching quarantine to buy a shaver for work the next day

வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தன்னுடைய வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவு முடிவடைவதற்கு ஒரு நாள் முன்பு வெளியே சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் சவரம் செய்து அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், சவரக்கருவி வாங்க ஒரு மாலுக்குச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

இந்திய நாட்டைச் சேர்ந்த வர்திரெட்டி நாகேஸ்வர ரெட்டி (வயது 35) புதன்கிழமை (மே 20) தனது வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு S$3,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சக ஊழியருடன் வர்திரெட்டி நெருங்கிய தொடர்பில் இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர் அனுமதியின்றி எந்த நேரத்திலும் தன்னுடைய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை விட்டு வெளியேற கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இருப்பினும், அவரது வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவு முடிவடைவதற்கு ஒரு நாள் முன்பு, வர்திரெட்டி தனது பிளாட்டை விட்டு செங்காங்கில் உள்ள காம்பஸ் ஒன் என்ற மாலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நீதிபதியியிடம், “இது என்னுடைய தவறு, நான் அபராதம் செலுத்துகிறேன்” என்று வர்திரெட்டி பதிலளித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக, ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : “தைரியமாக இருங்கள்” – சமூகத் தலைவர்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய பிரதமர் லீ வலியுறுத்தல்..!