S Pass, work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தள்ளுபடி..!

(Image: Singapore Ministry of Manpower/ Facebook)

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தனிமைப்படுத்தப்படும் காலங்களில், பணிப்பெண்கள் உட்பட அனைத்து S Pass மற்றும் work permit வைத்திருப்பவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடி செய்யப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சமூகத்தில் பரவும் COVID-19 கிருமித்தொற்றின் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அதிகரித்த செலவுகளை சமாளிக்க முதலாளிகளுக்கு இது உதவும் என்று MOM செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பாண்டான் நீர்த்தேக்கம் அருகே ஏற்பட்ட விபத்தில் பாதசாரி மரணம்..!

ஜனவரி முதல், work pass வைத்திருப்பவர்களுக்கான நுழைவு அனுமதிகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கூடுதல் எல்லை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூருக்கு புதிதாக வரும் S Pass மற்றும் work permit வைத்திருப்பவர்களை கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்துவது, தனிமை உத்தரவு உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊழியர்களின் தனிமை காலத்தின்போது ஏற்கனவே வெளிநாட்டு ஊழியர் தீர்வையை முதலாளிகள் செலுத்தி இருந்தால், அது ஜூன் மாதத்திற்கான தீர்வையை ஈடுசெய்ய பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு அதிக COVID-19 பாதிப்பு பதிவு!