வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி விலக்கு தள்ளுபடி இவ்வாண்டு இறுதி வரை நீட்டிப்பு.!

Pic: Today/File

சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றும் S Pass மற்றும் வேலை அனுமதி அட்டை கொண்ட வெளிநாட்டு தொழிாளர்களின் வரி விலக்கு தள்ளுபடி இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி விலக்கு செப்டம்பர் மாதம் இறுதிவரை தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி விலக்கு தள்ளுபடி காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது முதலாளிகள் செலவுகளை சமாளிக்க உதவும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 90 பேர் பாதிப்பு – விடுதிகளில் பாதிப்பு நிலவரம்

மேலும், இது வெளிநாட்டு ஊழியர்களுக்கும், வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறைக்கு வரி விலக்கு தள்ளுபடி ஆதரவளிக்கும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் சமூகத்தில் கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க, வீட்டில் இருப்பதற்கான கட்டாய உத்தரவு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்குக் கையில் அணிந்துக் கொள்ள பட்டைகள் – பாெருள் வாங்க கட்டணக் கழிவு!