கட்டுமானம், கப்பல் துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வைக் கழிவு நீட்டிப்பு..!

(PHOTO: REUTERS/Edgar Su)

கட்டுமானம், கடல் கப்பல் துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கான, வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீர்வைக்கான கழிவுகளை 2022ஆம் ஆண்டின் இறுதி வரை நீட்டித்துள்ளது.

இதற்காக S$920 மில்லியன் வரை ஒதுக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) இன்று சனிக்கிழமை (ஜூன் 27) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 43,000ஐ கடந்தது..!

இதில் கட்டுமானம், கடல் மற்றும் உற்பத்தித் துறைகளில் செலவினங்கள் அதிகம் என்றும் அமைச்சுகள் தெரிவித்துள்ளன.

எடுத்துக்காட்டாக, இந்தத் துறைகளில் உள்ள ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து, அதாவது வேலையிடத்திலிருந்து வீட்டுக்கும் வீட்டிலிருந்து வேலையிடத்துக்கும் கொண்டு செல்வது ஆகியவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துறைகளில் உள்ள 15,000 அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு இது சிறந்த ஆதரவாக இருக்கும் என்று அமைச்சுகள் கூட்டு வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

வரும் ஆகஸ்ட் முதல், ஒவ்வொரு வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியருக்கும் மாதந்தோறும் S$90 வரைக் கழிவு வழங்கப்படும்.

இந்த துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் வரை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 2021க்கு நெருக்கத்தில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு கழிவை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க வேண்டுமா என்று அரசாங்கம் முடிவு செய்யும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க : COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 14 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg