சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு: தூண்-பேருந்து இடையே சிக்கி பலியான சோகம்

WSH COUNCIL

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

கிராஞ்சியில் (Kranji) உள்ள தனியார் போக்குவரத்து முனையத்தில் நடந்த சம்பவத்தில் பேருந்துக்கும் தூணுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட 43 வயது வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்.

மரினா பே மிதக்கும் மேடை வெடித்து சிதறும் என பதிவிட்ட நபர் அதிரடி கைது

ஓட்டுநரான அவர், 60 ஜாலான் லாம் ஹுவாட்டில் அமைந்துள்ள முனையத்தில், மற்றொரு பேருந்துக்கு வழிகாட்டும்போது விபத்தில் சிக்கி ஆகஸ்ட் 3 அன்று உயிரிழந்தார்.

இந்த விபத்து அன்று காலை 11 மணிக்கு நடந்ததாக மனிதவள அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்தை அடுத்து, அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக சிகிச்சை பயனின்றி மரணித்ததாக MOM கூறியுள்ளது.

Singapore Towing Equipments நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் சீன நாட்டை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு வேலையிடத்தில் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.

அந்த ஒரு வார்த்தை சொன்னதும் கடுப்பான பெண்… பெண்ணை இப்படி சொல்லலாமா; MRT ரயிலில் நடந்த வாக்குவாதம்