கைபேசிக்கு அடிமையாகும் வெளிநாட்டு ஊழியர்கள் – இதனால் வேலையில் நாட்டமின்மை, கவன சிதறல் ஏற்படுகின்றன

COVID-19 cases Singapore rise
Photo: TODAY

கவலை, விரக்தியைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை கைபேசிக்கு அடிமையாவது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்றுநோய் பரவல் கடுமையாக இருந்தபோது ஊழியர்கள் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர், அதனால் அதிகமான ஊழியர்கள் இணைய வாழ்க்கைக்கு தங்களை அடிமை ஆக்கி கொண்டனர்.

ஜூரோங் வெஸ்டில் தீ – ஒருவர் மரணம், ஒருவருக்கு காயம்

விடுதிகளை விட்டு வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அவர்கள் உள்ளேயே அடைப்பட்டு இருந்தனர்.

தற்போது வரை தனிமையில் உள்ள ஊழியர்கள் பல்வேறு மன ரீதியான பிரச்சனைகளுக்கும் ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

பொழுதுபோக்கு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், பல ஊழியர்கள் வேலையில் இருந்து திரும்பியதும் தங்களுக்கு இருக்கும் ஒரே ஓய்வு தங்கள் கைபேசி என்று அதன் பக்கம் திரும்பினர்.

முக்கியமாக YouTube, Facebook மற்றும் TikTok போன்ற தளங்களின் காணொளிகளை விடிய விடிய பார்க்கும் ஊழியர்கள் பலர் உள்ளனர் என்பது மிகையாகாது.

அவர்கள் நீவீன இணைய வாழ்க்கைக்கு அடிமையானதாக HealthServeவின் ஆலோசகர் துர்கா அறிவான் பகிர்ந்து கொண்டார்.

மேலும், டிஜிட்டல் அடிமைத்தனம் காரணமாக அவர்கள் வேலை செய்யும் போது கவன சிதறல் ஏற்படுவதாகவும், இது ஊழியர்களுக்கு வேலையின் ஈடுபாட்டை குறைப்பதாகவும் அவர் கூறினார்.

லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் மூடல்