வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தில் முறைகேடு தொடர்பான 960 புகார்கள் விசாரணை.!

foreign workers complaimts investigation
Pic: TODAY

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பளத்தில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட சுமார் 960 புகார்களை மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் விசாரித்து உள்ளதாக மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon) இன்று (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் கடந்த 2016ம் ஆண்டிற்கும் 2020ம் ஆண்டிற்கும் இடையில் இந்த விசாரணையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

குடியிருப்பு பிளாக்கின் கீழே இறந்து கிடந்த பெண் – போலீஸ் விசாரணை

சம்பள முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களில் மூன்றில் இரண்டு, வெளிநாட்டு ஊழியர்களால் நேரடியாகத் தகவல் கொடுக்கப்பட்டவை என்றும், மூன்றில் ஒரு புகார், லாப நோக்கமற்ற அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புகள் மூலம் வரும் என்றும், சில முறைகேடுகள், அதிகாரிகள் நடத்தும் சோதனைகளின்போது வெளிப்படுபவை என்றும் கோ போ கூன் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நியாயமான சம்பளத்தை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மீண்டும் அவர்களிடம் இருந்து சில முதலாளிகள் திரும்ப பெற்றுக் கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச சுய பரிசோதனை கருவிகள் – நிதியமைச்சர் அறிவிப்பு.!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் முறைகேடுகள் நடந்தால் ஊழியர்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்கும் வசதிகள் உள்ளதை மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்பள முறைகேட்டுப் பிரச்சினை காரணமாக பாதிக்கப்படும் ஊழியர்கள், வேறு முதலாளியிடம் கட்டணமின்றி மாற்றிவிடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பளத்தில் முறைகேடு செய்யும் முதலாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதையும் மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் நினைவூட்டினார்.

வெளிநாட்டினருக்கு நற்செய்தி: செப்டம்பரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்..!