ஊழியர்களுக்குக் கையில் அணிந்துக் கொள்ள பட்டைகள் – பாெருள் வாங்க கட்டணக் கழிவு!

(Photo: Suhaimi Abdullah/Getty Images)

கோவிட்-19 தொற்றுக் காரணமாக விடுதியில் முடங்கி கிடந்த ஊழியர்களுக்கு, தற்போது வெளியிடத்திற்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது.

பைலட் திட்டத்தின்கீழ், லிட்டில் இந்தியாவுக்கு செல்வதற்கு தகுதியான ஊழியர்களைத் தங்கும் விடுதி ஆபரேட்டர்கள் தேர்வு செய்கின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் முதல் தொகுதி லிட்டில் இந்தியா சென்றனர் – எந்த விடுதியில் இருந்து தெரியுமா?

கடந்த செப். 15 முதல், பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் 500 ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தங்குவிடுதியிலிருந்து வெளியே செல்வதற்கு முன்பும், தங்குவிடுதிக்கு திரும்பி 3 நாட்களுக்கு பின்பும், ஆண்டிஜன் விரைவு பரிசோதனையை (ART) ஊழியர்கள் கட்டாயம் செய்துக் காெள்ள வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்குக் கையில் அணிந்துக் கொள்ள பட்டைகள் கொடுக்கப்படும். மேலும், அப்பகுதிக் கடைகளில் பாெருள் வாங்கக் கட்டணக் கழிவும் வழங்கப்படும்.

விடுதியில் அடைப்பட்டிருந்தோருக்கு விடுதலை! – வெளியே சென்ற தமிழக ஊழியர்கள் 100 பேர் பெரும் மகிழ்ச்சி

இத்தகைய விதிமுறைகள் அனைத்தும், தேர்ந்தெடுக்கப்படும் தங்குவிடுதியில் வசிப்பவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

லிட்டில் இந்தியாவில் அவர்கள் இருக்கவேண்டிய பகுதியை விட்டு மற்ற பகுதிகளுக்கு அவர்கள் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்படும்.

அவர்கள் உலாவுவதற்கான பகுதியில் அனைத்து வசதிகளும் இருப்பதால் அப்பகுதியை தெரிவு செய்ததாக திரு. துங் குறிப்பிட்டார்.

இந்த முன்னோடித் திட்டம், முக்கியமானதாெரு முதல் படி என்று கூறிய திரு துங், அனுமதிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு என்ற சாடல் இருந்து வருவதைத் தாம் அறிவதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், கோவிட்-19 தாெற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று திரு. துங் குறிப்பிட்டார்.

கொரோனா நோய்த்தொற்றால் 0.6% குழந்தைகள் மட்டுமே பாதிப்பு!