ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு பதில் 3 அல்லது 4 சிங்கப்பூர் ஊழியர்களை அமர்த்தும் நிலை..!

(photo: mothership)

மே 7 முதல், தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து உள்கட்டமைக்கு போன்ற பணிகளை தவிர வேறு எந்த பணிகளுக்காகவும் வேலை செய்யும் அனுமதி வைத்திருப்பவர்கள் நாட்டுக்குள் நுழைய சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CNA ஊடகத்திற்கு தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு பதில் மூன்று அல்லது நான்கு சிங்கப்பூர் பணியாளர்களை அமர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

லைம்லைட் நிறுவனத்தை சேர்ந்த திரு ஓய் கூறுகையில்; இயற்கை நில பரப்புகளை பேணி காப்பது அவசியம், அதை மக்கள் எப்பொழுதும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அதனை செய்தாக வேண்டியுள்ளது, அதன் முதற்கட்டமாக உபகரணங்களை பயன்படுத்த ஏதுவான சூழல் இருக்க வேண்டும் என்றார்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வால்டர் கூறுகையில்; “உயர்த்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலமும், சிங்கப்பூரர்களை ஈர்க்கும் வகையில் பணிகளை மாற்றி அமைப்பதும், அதற்குண்டான போதிய சம்பள உயர்வையும் வழங்குவதன் மூலமும் வரும்காலத்தில் இது போன்ற இக்கட்டான சூழலை சமாளிக்க முடியும்” என கூறினார்.

மற்றொரு பேராசிரியரான லாவண்யா கதிரவேலு கூறுகையில்; குறைந்த ஊதியம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்து வேலைகளை நடத்தப்படுவது தெரியவந்துள்ளது. அவர்களை சார்ந்திருக்கும் இந்த நிலை சிறிது மாற்றப்பட வேண்டும் என்றார்.

ஊதியத்தை அதிகப்படுத்துவதன் மூலமும், ஏதுவான சூழலை உருவாக்குவதன் மூலமும் உள்ளூர்வாசிகளை முடிந்த அளவு பணியில் அமர்த்த முடியும் என்பதே மேற்கொள்ளப்பட்ட கணிப்பாகும்.

மியான்மரில் நிலவும் சூழல் குறித்து குரல் எழுப்பிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!