சிங்கப்பூர் தங்கும் விடுதிகளில் தொண்டூழியர்களாக களமிறங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்..!

foreign workers in dormitories volunteers
COVID-19: Foreign workers in dormitories (Photo: Zakir Hossain Khokan)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் அன்றாடப் பணிகள் தொய்வின்றி நடப்பதை உறுதி செய்வதில் தொண்டூழியர்கள் சிறந்த பங்காற்றி வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடப்பில் உள்ளதால், வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 9வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

மேலும், அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதலான தொண்டூழியர்களின் உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உணவு விநியோகம், துப்புரவு, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் தொண்டூழியர்கள் உதவி செய்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேவைகளை சரிக்கட்ட, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவை சேர்ந்த FAST குழு, தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்தது. விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் தொண்டூழியம் செய்ய முன்வந்துள்ளனர் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் புரிந்தால் காவல்துறை விசாரணை – மசகோஸ்..!