சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் இனி சுலபமாக தங்களுடைய பணத்தை சொந்த ஊருக்கு அனுப்பலாம்..!

(Reuters file photo)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி சுலபமாக தங்களுடைய பணத்தை அனுப்பலாம்.

நிதித்தொழில்நுட்ப நிறுவனமான ‘ரெம்சி’ இதில் நேரடியாக பணம் அனுப்ப பேருதவி செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவைகளை வழங்க சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் உரிமம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் புதிய 4 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

கடந்த மாதம் அறிமுகமான இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஊழியர்களின் சம்பளப் பட்டியலில் இருந்தே நேரடியாகப் பணத்தை அனுப்ப இது பணியாற்றுகிறது.

தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சொந்த ஊருக்கு அனுப்பவும் யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்ற விவரங்களை வழங்கவும் ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பணப் பரிவர்த்தனை நிறைவுபெற்றதும் அது தொடர்பான விவரங்கள் ஊழியர்களுக்குத் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், பணம் அனுப்புவதற்காக எந்த தரகுத் தொகையும் வசூலிக்கப்படுவதில்லை .

மேலும் அந்த தரகுத் தள்ளுபடியை கூடுதலாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக ஊழியர்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது, ஏனெனில் இது மின்னிலக்க முறையில் பணத்தை அனுப்ப உதவி புரிகிறது.

இந்த அணுகுமுறையால் ஊழியர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிப்பது எளிதாக அமையும் என்று திரு லிம் கூறியுள்ளார் என்று தமிழ் முரசு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் – மலேசியா இடையேயான பயணம் மீண்டும் தொடங்குவதற்கு முன் தேவையான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்..!