COVID -19 பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனிமைப்படுத்தும் வளாகங்களில் வசதிகள்…!

தனிமைப்படுத்தப்படுள்ள வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை.
தனிமைப்படுத்தப்படுள்ள வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை.

இக்கிருமி தொற்று அறிகுறிகள் இல்லாத மற்றும் மிக இலேசாக அறிகுறிகள் உள்ள நோயாளிகள் கடந்த மாதம் முதல், படிப்படியாக தனியார் மற்றும் சமூக மருத்துவமனைகளுக்கும், சமூகத்தில் உள்ள தனிமைப்படுத்தும் வசதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோரில் சுமார் 90 விழுக்காட்டினர் இத்தகைய வளாகங்களில் தங்கி வருகின்றனர். அவற்றில் சில:

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் ஏர்ஷோ மைதானம் தனிமைப்படுத்தப்படும் இடவசதியாக மாற்றம்..!

1. லிம் சூ காங்கில் சரிம்பான் சாரணர் முகாமிலுள்ள சில இடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

2. புக்கிட் தீமா இயற்கை காப்பகத்திற்கு அருகிலுள்ள கல்வியமைச்சின் ‘டெய்ரி பார்ம் அவுட்டோர் அட்வென்ச்சர்’ கல்வி நிலைய வளாகத்திலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

3. சிங்கப்பூர் ஏர்ஷோவின் இல்லமாக இருக்கும் சாங்கி கண்காட்சி நிலையத்தில் தற்போது சுமார் 2,800 நோயாளிகள் தங்குகின்றனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

4. பாசிர் ரிஸ் வட்டாரத்திலுள்ள என்டியுசி டி’ரிசார்ட்டில் தனிமைப்படுத்தபடுகின்றனர். (படம்: சாவ்பாவ்)

5. பழைய சுவா சூ காங் ரோட்டிலுள்ள ஹோம் டீம் அகெடமியிலுள்ள ஊழியர் தங்கும் விடுதியிலுள்ள புளோக்(BLOCK). (படம்: ஹோம் டீம் அகெடமி)

6. ஜூரோங் கேம்ப் இரண்டு. (படம்: Ministry of Defense)

7. தஞ்சோங் பகார் கப்பல் முனையத்தில் அமைக்கப்பட்டுவரும் கூடாரங்கள். இங்கு சுமார் 15,000 வரையிலான நோயாளிகள் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

8. சிங்கப்பூர் எக்ஸ்போ. (படம்: Ministry of Health)

9. தாமான் ஜூரோங்கில் காலியாக உள்ள வீடுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

10. சூப்பர் ஸ்டார் ஜெமினி (கீழ்) போன்ற இரண்டு சொகுசு கப்பல்களில் நோயாளிகள் தங்க வைக்கப்படலாம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

Source: Tamil Murasu

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 931 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!