“வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்புவது குறையலாம்”

(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

திறன் வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு அதிக காலம் எடுக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த எண்ணிக்கை முந்தைய மந்தநிலைகளுடன் ஒப்பிடும்போது சிறிய அளவில் இருக்கலாம் என்று கடந்த வாரம் ஊழியர் சந்தை அறிக்கை 2020 வெளியானதைத் தொடர்ந்து வல்லுநர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

ஊழியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முதலாளிகள் காத்திருப்பு..!

மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர் கடந்த 20 ஆண்டுகள் நிலவரப்படி மொத்த வேலைவாய்ப்பில் மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.

இந்த வேலையிழப்பில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

பின்னர் அந்த நிலை மேம்பட்டு, சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் 14,900ஆக அதிகரித்தது.

கடந்த 2020ல் சிங்கப்பூரர் அல்லாத ஊழியர்களில் சுமார் 181,500 பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்தின்கீழ் சிக்கிய விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!