நாற்றம் வீசும் வெளிநாட்டு தொழிலாளி; மகனுக்கு அப்பா கற்றுத்தந்த அருமையான பாடம்.!

S’porean Dad Teaches Son Kindness Towards Foreign Workers Through Stickman Comics

சிறு வயதிலிருந்தே, குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்கள் முன்வைக்கும் பல உதாரணங்களை கற்றுக்கொள்கிறார்கள், எனவே அவர்களுக்கு நேர்மறையான வார்த்தைகள் மற்றும் வழிகாட்டிகள் மிக முக்கியமான ஒன்று.

“Father and son” என்ற பேஸ்புக் பக்கத்தின் பின்னால் உள்ள ஒரு சிங்கப்பூர் அப்பா நிச்சயமாக சரியான வழியில் தனது குழந்தைக்கு ஒரு அருமையான பாடம் எடுத்துள்ளார், அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பக்கத்தில் இடம்பெற்ற ஒரு பதிவு பலரின் வாழ்த்துக்களை பெற்றுள்ளது, ஏனெனில் அவர் தனது மகனுக்கு வரைபடங்கள் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது கருணை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வரைபடங்கள் உங்கள் பார்வைக்கு:

இந்த வரைபடங்கள் உணர்த்த வரும் செய்தி, விரும்பத்தகாத நாற்றம் வீசும் காரணத்தால் வெளிநாட்டு தொழிலாளி அருகில் அமர மாட்டேன் என்று கூறும் தன் மகனுக்கு அப்பா கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது.

அவர் மீது ஏன் நாற்றம் வீசுகிறது தெரியுமா? ஒரு நாளில் அவர் 14 மணி நேரம் வேலை செய்கிறார், அதனால் தான் என்று தன் மகனுக்கு விளக்குகிறார்.

அப்பா, வெளிநாட்டு தொழிலாளி என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், நீண்ட நேரம் வேலை செய்வது, தாங்கள் செய்ய விரும்பாத வேலையை செய்வது, மோசமான சில ஏஜெண்டுகளுக்கு செலுத்த வேண்டியது, ஆகிய காரணத்தினால் விரும்பத்தகாத நாற்றம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த தொழிலாளிக்கும் குடும்பம் இருக்கிறது, அவரின் குழந்தைகள் அவருக்காக காத்திருக்கின்றன என்ற தகவலையும் அவர் பதிவு செய்கிறார்.

வெளிநாட்டு தொழிலாளி செய்யும் தியாகங்கள், இந்த வியர்வை, இந்த விரும்பத்தகாத வாசனை, சிங்கப்பூருக்கு முதல் முதலில் வந்த முன்னோர்களுக்கு இருந்ததை போன்றது, என்ற ஆழமான கருத்தை கூறியுள்ளார்.

இறுதியாக தன் மகன் அந்த தொழிலாளியுடன் அமருவது போன்ற வரைபடத்தை பதிவு செய்து நேர்மறையான தன்னுடைய கருத்தை இந்த சமுதாயத்திற்கு கூறியுள்ளார்.