வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிடலாம், ஆனால் மனத் தேவையை எளிதில் அளந்துவிட முடியாது

(Photo: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் தற்போதைய சூழலில், மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இருப்பதாக IMH நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மசாஜ் நிலையங்களில் பாலியல் தொடர்பான சேவையில் ஈடுபட்டதாக 6 பெண்கள் கைது

இதன் காரணமாக விடுதியில் உள்ள ஊழியர்கள், வெளியே செல்ல முடியாமலும் மேலும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள முடியாமலும் போனது.

தனிமை காரணமாக கடுமையான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை அதிகமானோர் எதிர்கொள்வதாக விளக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு தற்கொலை எண்ணங்களை கூட ஏற்பட்டதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிடலாம், ஆனால் அவர்களின் மனநலத் தேவைகளை எளிதில் அளந்துவிட முடியாது.

அவர்களின் மனதிற்கு மருந்து, அவர்களின் தேடல், ஏக்கத்தை போக்குவது தான் என்று கூறினால் அது மிகையாகாது. பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு எப்போது செல்வோம் என்ற ஏக்கத்தில் தான் தற்போது வரை உள்ளனர்.

வலைத்தளங்களில் பெரும்பாலான ஊழியர்கள் எப்போது விமான சேவை தொடங்கும்? என்ற ஒரே கேள்வியை முன்வைக்கின்றனர். அதற்கான பதிலை விரைவாக அரசாங்கம் அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏனெனில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் சமீபத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவையை தொடங்குகிறது. அது படிப்படியாக பல்வேறு நாடுகளுக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் மனக்கவலை விரைவில் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 84 பேர் மீது அமலாக்க நடவடிக்கை