சிங்கப்பூரில் வேலையின்போது கீழே விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – இழப்பீடு கோரி வழக்கு..!

foreign workers suing damages incidents
(PHOTO: JAHID family)

ஒரே முதலாளிக்கு திறம்பட பணியாற்றிய பங்களாதேஷை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், வேலை செய்யும் போது உயரத்திலிருந்து கீழே விழுந்ததில், நிரந்தரமாக உடற்குறைப்பாடு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இழப்பீடு வேண்டி, முதலாளி மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு அவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியர் – மரணத்தில் எந்த சதிச்செயலும் இல்லை..!

இதில் 40 வயதான ஜாஹித் மற்றும் 44 வயதான ஜானெட் ஆகிய இருவரும் வேலை அனுமதியுடன் சிங்கப்பூரில் பணிபுரிந்தனர்.

ஜாஹித், யுனைட்டெட் ஸ்குவேர் மாலில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, பராமரிப்பு பணியின்போது ஏணி ஒன்றில் 4 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானார்.

மேலும் ஜானெட், அதே 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வெஸ்ட்கேட் டவரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது

உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான முதுகுத்தண்டு காயங்கள் காரணமாக நடக்கமுடியாத சூழலில் படுத்த நிலையிலேயே உள்ளார்.

பங்ளாதேஷை சேர்ந்த சகோதரர்கள் இருவரும், இந்த சம்பவம் ஏற்பட்ட சமயத்தில் பணிபுரிந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். ஜானெட், $650,000 இழப்பீடு கோரியும், அதே போல ஜாஹித், $290,000 இழப்பீடு கோரியும் வழக்கு தொடுத்துள்ளனர்.

பணியிடங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று சகோதர்களின் வாதமும், கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என்று தற்காப்பு தரப்பு வாதமும் உள்ளது. இதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்களுக்கு தொற்று பாதித்தவர்கள் சென்றுள்ளனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…