கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரை விட்டு வெளியேற்றம் – வேறு எங்கு சென்றார்?

Photo: Gotabaya Rajapaksa official Twitter Page

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச தற்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறுகிய கால பயண அனுமதியின்கீழ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிங்கப்பூருக்கு வந்த அவர் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) சிங்கப்பூரை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

குழந்தையின் உயிரை எடுத்த அரக்கன்… 15 பிரம்படிகளுடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்

திரு கோத்தபாய ராஜபக்ச இன்று ஆகஸ்ட் 11 சிங்கப்பூரை விட்டு வெளியேறியதை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) உறுதிப்படுத்தியுள்ளது.

திரு ராஜபக்சேவின் குறுகிய கால அனுமதி இன்று (ஆகஸ்ட் 11) வியாழக்கிழமையுடன் காலாவதி ஆகிவிட்டது.

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சிங்கப்பூர் வந்த அவருக்கு முதலில் 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் அது மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 11 வரை அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து சென்ற அவர் அடுத்த பயணமாக தாய்லாந்த் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு: தூண்-பேருந்து இடையே சிக்கி பலியான சோகம்