குடியிருப்பில் இறந்து கிடந்த ஆடவர்: இறந்து சில நாட்களாகியிருக்கலாம் – காவல்துறை

Photo: Shin Min Daily News

சிங்கப்பூரில் 72 வயது முதியவரின் சடலம், வாம்போவாவில் உள்ள பிளாக் 105 டவுனர் சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் புதன்கிழமை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது வீட்டில் தனியாக வசித்து வந்த அவர் இறந்து சில நாட்களாகியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

மலேசியா-சிங்கப்பூர் விமான சேவை: 6 விமான நிறுவனங்கள் வழங்கும் – அனுமதி விண்ணப்பம் எப்போது?

புதன்கிழமை காலை 9.44 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், அந்த ஆடவர் குடியிருப்பில் அசைவின்றி கிடந்ததை கண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவர் ஒருவர் அந்த ஆடவர் இறந்ததை சம்பவ இடத்திலேயே உறுதி செய்தார்.

விசாரணைகள் நடந்து வருகிறது, ஆனால் இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்று அந்த ஃப்ளாட்டைப் பார்வையிட்டபோது, ​​பல பொருட்கள் தாழ்வாரத்திலும் வீட்டுக்குள்ளும் சிதறிக்கிடந்தன, மேலும் ஒரு துர்நாற்றம் வீசியதாகவும் கூறியுள்ளது.

அவர் பொருட்களை சேமித்து குவித்துவைப்பவர் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை விதிப்பு