சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து..!

71-year-old woman taken to hospital after four-vehicle accident in Clementi
Four-vehicle accident in Clementi (Photo: Facebook/ROADS.sg)

உலு பாண்டன் (Ulu Pandan) ரோடு மற்றும் கிளெமென்டி (Clementi) ரோடு சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை (செப். 11) காலை நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 71 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 9 மணிக்குப் பிறகு, டாக்ஸி, இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிய சம்பவங்களில் 73 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள்..!

இதில் 71 வயதான பெண் கார் ஓட்டுநர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது சுயநினைவுடன் இருந்தார் என்று சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த சாலை விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும், அதன் வீரர்கள் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக் ROADS.sg பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில், விபத்துக்குள்ளான இடத்தைச் சுற்றி மக்கள் நிற்பதைக் காட்டியது, அதே நேரத்தில் பல வாகனங்கள் சந்திப்பில் சிக்கியதையும், இதனால் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டதையும் காணமுடிகிறது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு பேருந்துகள் பறிமுதல் – LTA

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts