சிங்கப்பூர் TPG டெலிகாம் – இன் அதிரடி சலுகைகள்.!

சிங்கப்பூரில் சமீபத்தில் தொடங்கிய TPG தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுக சலுகையாக முதலில் பதிவு செய்யும் 20,000 புதிய வாடிக்கையாளர்களுக்கு 12 மாத கால இலவச Data -வை முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த TPG தொலைத்தொடர்பு நிறுவனம் தனது சந்தையை விரிவுப்படுத்த பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக புதிய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

சிறப்பு சலுகைகள்:

1. 12 மாத காலத்திற்கு Unlimited Data முற்றிலும் இலவசம்.

2. Unlimited Local கால்கள் 12 மாதத்திற்கு இலவசம்.

3. மாதந்தோறும் 20 SMS மற்றும் 20 நிமிடம் லோக்கல் Landline அழைப்புகள் ஒரு வருடத்திற்கு இலவசம்.

தினந்தோறும் Unlimited Data -வில் 4G சேவையில் 2GB வரை பெறலாம், 2GB முடிந்த பிறகு வேகம் 1 Mbps ஆக குறைக்கப்படும். 12 மாதத்திற்கு பிறகு இந்த திட்டங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படும்.