சிங்கப்பூர் மசூதிகளில் ஆன்லைன் முன்பதிவுடன் மீண்டும் தொடங்கும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை..!

Friday prayers in mosques to resume from June 26 with online booking system, limited to 50 people a session
Friday prayers in mosques to resume from June 26 with online booking system, limited to 50 people a session (Photo: The Straits Times)

சிங்கப்பூர் மசூதிகளில் ஆன்லைன் முன்பதிவுடன் மீண்டும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் தொடங்க உள்ளன.

சிங்கப்பூரில் தொழுகை பிரார்த்தனைகள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் பெரும்பாலான பள்ளிவாசல்களில் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “தனிப்பட்ட சிரமங்களை வெளிக்காட்டாமல் குடும்பத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் தந்தை” – பிரதமர் லீ..!

அதாவது ஒரு அமர்வுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு அரை மணி நேர பிரார்த்தனை அமர்வுகள் இருக்கும், கூட்டத்தின் பாதுகாப்பை நிர்வகிப்பதை உறுதி செய்வதற்காக இரண்டு அமர்வுகளுக்கு இடையில் அரை மணி நேர இடைவெளி இருக்கும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (Muis) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Muis உருவாக்கிய ஆன்லைன் பிரார்த்தனை முன்பதிவு முறையைப் பயன்படுத்தி தினசரி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை பிரார்த்தனைகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படும்.

மேலும் முன்பதிவு இல்லாமல், மசூதிகளுக்குள் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளுக்காக, ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒரு இடம் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதன் மூலம் அதிகமான வழிபாட்டாளர்கள் தங்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்ற அனுமதிக்கபடுவர் என்று Muis குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பிரசங்கங்கள் மற்றும் பிரார்த்தனைகள் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசங்கங்களை நிகழ்த்தும்போது, ​​இமாம்கள் முதல் வரிசையிலிருந்து குறைந்தபட்சம் 2மீ தொலைவில் நிற்க வேண்டும், மேலும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

1மீ இடைவெளியில் குறிக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட தனிப்பட்ட இடங்களில் வழிப்பாட்டாளர்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

வழிபாட்டாளர்கள் தொழுகைக்காக மசூதிகளுக்குள் நுழையும்போது, ​​SafeEntry செயலி மூலம் தங்கள் NRIC எண்கள் அல்லது FIN பயன்படுத்தி நுழைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் TraceTogether செயலியை பயன்படுத்தவும் அதிகம் ஊக்குவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg