சிங்கப்பூரில் புதிய வேலை! – மருந்துத் தயாரிப்பு ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்

COVID-19: Singapore must be prepared for second wave of infections

சிங்கப்பூரின் துவாசில் உள்ள முன்னணி அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான எம்எஸ்டி,அதன் தயாரிப்பு ஆலையை சுமார் $280 மில்லியன் செலவில் விரிவுபடுத்துகிறது.மேலும் புதிய பேக்கேஜிங் முறையை நேற்று அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அத்துடன்,புதிய தலைமுறை உறிஞ்சு மருந்து தயாரிப்பு ஆலையை நிறுவுவதற்கான நில அகழ்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வர்த்தக,தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங், கலந்து கொண்டு பேசினார்.எம்எஸ்டியின் முதலீட்டால் உள்ளூரில் நூற்றுக்கணக்கான புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 1800-க்கும் மேற்பட்டதாக உயரும்.ஆலை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம் சிங்கப்பூரில் அந்நிறுவனத்தின் முதலீடு $3 பில்லியனைத் தாண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.$700 மில்லியனை சிங்கப்பூரில் முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கிய அத்திட்டத்தின் ஒரு பகுதியாக துவாஸ் ஆலை விரிவாக்கம் இடம்பெறுகிறது.நிறுவனத்தின் முதன்மையான பத்துப்பொருட்களில் 7 சிங்கப்பூரில் தயாரிக்கப்படுகின்றன.

எம்எஸ்டி நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.சிங்கப்பூரில் நிறுவப்படவுள்ள புதிய உறிஞ்சு மருந்து தயாரிப்பு ஆலை 2026-ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.